உண்மையா?

>> Sunday, January 10, 2010

  1. பன்றிகள் உலகின் நான்காவது புத்திசாலி மிருகமாமே?


  2. பாரீஸில் வசிக்கும் மனிதர்களைவிட நாய்களின் எண்ணிக்கை அதிகமாமே?


  3. எறும்புகள் தூங்குவதில்லயாமே?


  4. பறவைகளுக்கு வியர்க்காதாமே?


  5. மனிதனால் கண்களை திறந்து கொண்டு தும்ம முடியாதாமே??

Read more...

என்னை பாதித்த கவிதை

>> Saturday, June 13, 2009
ஜன்னலுக்கு வெளியே
காலில் சலங்கை கட்டிய
கழைக்கூத்தாடியொருவன்
ஒலிக்கும் உருமிக்கேற்ப
சாட்டையைச் சுழற்றுகிறான்.
பீறிடும் ரத்தம் பதிவாகிறதென் நோக்கியாவில்
யூ ட்யூபில் பதியலாம்
ஆர்க்குட்டில் போடலாம்
வலைப்பூவில் எழுதலாம்
N 73 என்றால் சும்மாவா?

படைப்பு : செல்வேந்திரன்

Read more...

யார் நுகர்வோர்?

>> Tuesday, June 2, 2009
ஒரு பொருளை (GOOD) அல்லது சேவையை (SERVICE) உரிய விலை(PRICE) அல்லது கட்டணம்(CHARGE) கொடுத்து சொந்த உபயோகத்திற்காக வாங்கும் அனைவரும் நுகர்வோரே!ஒரு பொருளை பெறும்போது அதற்கான விலையை முழுதாக கொடுத்தாலும், கொடுப்பதாக உறுதியளித்தாலும், விலையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டு மீதியை தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டாலும் பொருளை பெற்றவர் நுகர்வோராக கருதப்படுவார்.


இவ்வாறு ஒரு பொருளை விலை கொடுத்து அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொண்டு வாங்கியவர் தவிர அவருடைய அனுமதியுடன் அந்த பொருட்களை பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோராகவே கருதப்படுவார்.


அதேபோல, ஒரு சேவையை பெறுவதற்கு / பயன்படுத்துவதற்கு, அதற்கான கட்டணத்தை முழுமையாகவோ, தவணை முறையிலோ செலுத்துபவரும், அவ்வாறு செலுத்துவதாக ஒப்புக்கொண்டவரும் நுகர்வோராக கருதப்படுவர்.


இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்துபவரின் / செலுத்த ஒப்புக் கொண்டவரின் அனுமதியுடன் பயன்படுத்தும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.பொருட்களை சொந்த உபயோகத்திற்கு வாங்குபவர் மட்டுமே நுகர்வோராக கருதப்படுவார். அந்த பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ, வணிக நோக்கத்திலோ வாங்குபவர் சட்டத்தின் பார்வையில் நுகர்வோராக கருதப்பட மாட்டார்.


அதேபோல சேவைகளிலும் கட்டணம் செலுத்தி சேவையை பெறுபவரே நுகர்வோராவார். இலவச சேவைகள் மற்றும் தனி ஒப்பந்தத்தின் கீழான பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றை பெறுபவர்களை நுகர்வோராக சட்டம் கருதாது.இந்த நுகர்வோர் என்ற கருத்து தனியார் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் அரசுக்கும் பொருந்தும். அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ தயாரிக்கும் / விற்பனை செய்யும் பொருட்களை (டாஸ்மாக் உட்பட) அதற்கான விலை கொடுத்து வாங்கும் அனைவரும் நுகர்வோர்கள்தான்.அரசு நேரடியாகவோ, வேறு வகையிலோ அளிக்கும் சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி பயன்படு்ததும் அனைவரும் நுகர்வோர்தான். இந்த அடிப்படையில், ஒரு பொருளை - சேவையை உரிய விலை/கட்டணம் செலுத்தி வாங்கும் அனைவரும், அந்த பொருளில்/ சேவையில் குறைகள் இருந்தால் சட்டத்தின் துணையுடன் அந்த பொருளை/ சேவையை வழங்கியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.அரசுக்கு எதிராகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த பொருள் / சேவை இலவசமாக வழங்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அதேபோல அரசோ, அரசு அதிகாரியோ தவறாக செய்த காரியத்திற்காகவோ, கடமையை செய்யத் தவறியதற்காகவோ நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.


நன்றி:http://nukarvor-nalan.blogspot.com/

Read more...

பாரதப் பெண்களின் கலைகள்

>> Monday, April 6, 2009பெண்களின் கலைகளாக 64 கலைகளை நமது பழைய நூல்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன.லலிதா சஹஸ்ரநாமத்தில் 236-வதாக வரும் நாமமான சதுஸ்சஷ்டி கலாமயி என்ற நாமம் 64 கலைகளின் ரூபமாக இருப்பவள் லலிதாம்பிகை என்று குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் பாஞ்சால மஹரிஷி இந்த 64 கலைகளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறார். ஆக உலகின் ஆதி நூலான வேதத்திலேயே 64 கலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்! பெண்களுக்குரிய 64 கலைகளை விரிவாகக் கல்ப சூத்திரம் குறிப்பிட்டுள்ளது.


1) நாட்டியம்

2) ஔசித்யம்

3) ஓவியம்

4) வாஜித்ரம்

5) மந்திரம்

6) தந்திரம்

7) தனவ்ருஷ்டி

8) கலா விஹி

9) சம்ஸ்க்ருத வாணி

10) க்ரியா கல்பம்

11) ஞானம்

12) விஞ்ஞானம்

13) தம்பம்

14) ஜலஸ்தம்பம்

15) கீதம்

16) தாளம்

17) ஆக்ருதி கோபன்

18) ஆராம் ரோபன்

19) காவ்ய சக்தி

20) வக்ரோக்தி

21) நர லக்ஷணம்

22) கஜ பரிட்சை

23) அசுவ பரிட்சை

24) வாஸ்து சுத்தி

25) லகு வ்ருத்தி

26) சகுன விசாரம்

27) தர்மாசாரம்

28) அஞ்சன யோகம்

29) சூர்ண யோகம்

30) க்ருஹி தர்மம்

31) சுப்ரஸாதன் கர்ம

32) சோனா சித்தி

33) வர்ணிக வ்ருத்தி

34) வாக் பாடவ்

35) கர லாகவ்

36) லலித சரண்

37) தைல சுரபீகரண்

38) ப்ருத்யோபசார்

39) கோஹாசார்

40) வியாகரணம்

41) பர நிராகரண்

42) வீணா நாதம்

43) விதண்டாவாதம்

44) அங்கஸ்திதி

45) ஜனாசார்

46) கும்ப ப்ரம

47) சாரி ஸ்ரமம்

48)) ரத்னமணி பேதம்

49) லிபி பரிச்சேதம்

50) வைக்ரியா

51) காமா விஷ்கரண்

52) ரந்தன்

53)கேஸ பந்தன்

54) ஷாலி கண்டன்

55) முக மண்டன்

56) கதா கதன்

57) குஸ¤ம க்ரந்தன்

58) வர வேஷ

59) சர்வ பாஷா விசேஷ

60) வாணிஜ்ய விதி

61) போஜ்ய விதி

62) அபிதான பரிஞான்

63) ஆபூஷண தாரண்

64) அந்த்யாக்ஷ¡ரிகா


மேலே உள்ள பட்டியலை ஒரு தரம் படித்தாலேயே நம் பண்டைய பெண்மணிகள் எதிலெல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் தொடாத துறை இல்லை; வெல்லாத விஷயம் இல்லை.

Read more...

பார் கோடுகளை அறிந்து கொள்வோம்

>> Wednesday, February 11, 2009


கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பேக்கிங் மீது பட்டை பட்டையாக கறுப்பு,வெள்ளை வரிகள் அச்சிடப்பட்டு அதன் கீழ் எண்கள் குறிக்கப்பட்டிருப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.இதனை “பார் கோடுகள்” என்பர். இதனை வைத்து இந்த பொருள்கள் எந்த நாட்டிலிருந்து வருகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.சில நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் பர்கோடுகளில் உள்ள ஆரம்ப இலக்கங்களின் விவரங்கள் இதோ...

00 - 13 : அமெரிக்கா & கனடா
30 - 37 : பிரான்ஸ்
40 - 44 : ஜெர்மனி
45 & 49 : ஜப்பான்
50 : பிரிட்டன்
54 : பெல்ஜியம்
57 : டென்மார்க்
64 : பின்லாந்து
73 : ஸ்வீடன்
76 : ஸ்விட்சர்லாந்து
84 : ஸ்பெயின்
93 : ஆஸ்திரேலியா
471 : தைவான்
480 : பிலிப்பைன்ஸ்
489 : ஹாங்காங்
690 - 692 : சைனா
729 : இஸ்ரேல்
750 : மெக்சிகோ
779 : அர்ஜெண்டினா
789 : பிரேசில்
880 : தென்கொரியா
885 : தாய்லாந்து
888 : சிங்கப்பூர்
890 : இந்தியா
893 : வியட்னாம்
899 : இந்தோனேஷியா

Read more...

திருக்குறுங்குடி தரிசனம்

>> Sunday, January 25, 2009ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் நாளன்று புனித கோவில்களுக்கு சென்று வருவது வருடத்தின் நல்ல துவக்கமாக அமைவதால்,தற்போது நிறைய பேர் இப்படி பயணங்களை மேற்கொள்கின்றனர்.இந்த வகையில் நானும் எனது குடும்பத்துடன் கடந்த 3 வருடங்களாக ஜனவரி முதல் நாளன்று(ஆங்கிலப் புத்தாண்டை நாம் அனுசரிக்க வேண்டியதில்லை என்ற போதிலும்) சில பிரசித்தமான திருக்கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன்.

கடந்த 2 வருடங்களாக திருக்குறுங்குடி என்ற திருத்தலம் சென்று வருதலால் இம்முறை அந்த திருக்கோவிலைப் பற்றி இங்கு பதிவு செய்கிறேன்.

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் நான்குநேரியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஏர்வாடி என்னும் ஊர் வழியாக இந்த ஊருக்கு வரவேண்டும்.ஒரே திருத்தலத்தில் பெருமாள் 5 நம்பியாக அருள் பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.இவ்வூரின் முக்கிய கோவிலினுள்ளேயே பெருமாள் நின்ற நம்பியாக(சுந்தர வடிவழகுடைய நம்பி) நின்ற கோலத்திலும்,கிடந்த நம்பியாக சயன கோலத்திலும்,இருந்த நம்பியாக அமர்ந்த கோலத்திலும் காட்சியளிக்கிறார்.இந்த மூர்த்தங்கள் அனைத்துமே சிலை,அதன் மேல் சுதை,அதன் மேல் மூலிகை வண்ணம் என நிர்மாணிக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.மெல்லிய தீப ஒளியில் வண்ணம் கொண்ட பெருமான் சேவை சாதிப்பது மனம் ஒடுங்க வைக்கும் மெய் நிகழ்வாகும்.இத்திருக்க்கோவிலினுள்ளே கிழக்கு நோக்கி சேவை சாதிக்கும் நம்பி ,மேற்கு பார்த்து கோவிலினுள்ளேயே எழுந்தருளியுள்ள மஹேந்திரகிரிநாதர் என்னும் திருப்பெயர் கொண்ட சிவபெருமானுக்கு தோற்ற்ம் அளித்த்தாக தல வரலாறு.ஆகவே இந்த வைணவக் கோவிலினுள்ளே சிவனுக்கும் தனி சன்னதி இருப்பது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.பிற்காலத்தில் இதுவே சில நீடிக்கும் சர்ச்சைகளுக்கும் காரணமாகி விட்டாலும்,எளிய பக்தர்களை இவையெல்லாம் பாதிப்பதில்லை.அழகிய சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினுள் ஓர் பாரம்பரியம் கண்டுகொள்ளப்படாமல் மறைந்திருக்கிறது.மூல கோபுரத்தின் உள்கூடு மரத்தினால் செய்யப்பட்டு அதனுள் அழகிய பல மரச்சிற்பங்கள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பாகும்.ஆனால் இதன் அருமை தெரியாத நம்மவர்கள் இதனை பாதுகாக்காதது மட்டுமல்லாமல் பராமரிக்காமலும் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.இக்கோவிலில் நம்பாடுவான் என்ற பக்தனுக்கு மோட்சத்தை அளித்த கைசிக ஏகாதசி மிகவும் பிரசித்தம். திருமங்கை ஆழ்வார் இத்தலத்தில் மோட்சமடைந்ததாக வரலாறு. பெரியாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோரால் மொத்தம் 40 பாசுரங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.

இக்கோவிலில் அருள் பாலிக்கும் காலபைரவர் மற்றுமொரு விசேஷமாகும். பெருமாளின் மூர்த்தங்கள் போலவே பைரவரும் வண்ண கோலம் கொண்டிருப்பது தனிச்சிற்ப்பு. பைரவர் அருகே ஒளிரும் விளக்கின் ஒரு சுடர் மட்டும் காற்று அசைப்பது போல் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கிறது. பைரவரின் மூச்சுக்காற்றில் சுடர் அசைவதாக ஐதீகம்.வேண்டும் வரம் தரும் காலபைரவருக்கு பூச்சட்டையும்,வடைமாலையும் பிரசித்தமான வேண்டுதல்கள். தனக்கான சன்னதி கோவிலுக்கு உள்ளேயா அல்லது வெளியேயா என்று நீதிமன்றத்திற்கும் பக்தர்களுக்கும் நடுவே காத்துக்கொண்டிருக்கும் மஹேந்திரகிரிநாதர் நிலைமை இந்து சமூகத்தில் இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் பிழைக்கு சாட்சி.

நான்காவது நம்பி திருப்பாற்கடல் நம்பியாக அரைக் கி.மீ தொலைவில் உள்ள கோவிலில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஐந்தாவது நம்பி ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மலைமீது நம்பியாற்றின் கரையிலே இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் சூழலிலே மலைமேல் நம்பியாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.பளிங்கு போல் பரிசுத்தமாக மலை நம்பியின் காலடியில் பாய்ந்து வரும்புனிதமான நம்பியாற்றின் குளியல் நிஜமாகவே கங்கைக்கு ஒப்பானதுதான்.இந்த புனித குளியலுக்கும் திவ்வியமான திருமாலின் தரிசனத்திற்கும் காட்டுப் பாதை பயணம் தான் சவாலான விஷயம்.சாலையே இல்லாத பாதையில் கற்களின் மீது சாகசமாக பயணிக்கும் ஜீப் பயண்ம் திகில் விரும்பிகளுக்கு உண்மையிலேயே ஒரு விருந்து தான்.”உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு” என்று சொல்ல கேட்டிருப்போம். உண்மையிலேயே இந்த பயணத்தில் உயிரை ஜீப்பின் கம்பியில் பிடித்துக்கொண்டு தான் பயணம்.தெம்பிருப்பவர்கள் நடந்தே செல்வது நலம்.

ஊரிலிருந்து 1 கி.மீ.தொலைவில் திருவட்டப்பாறை என்னும் இடத்தில் பகவான் இராமானுஜருக்கு ஒரு சன்னதி அமைந்துள்ளது.பெருமாள் இங்கு வடுக நம்பியாக இராமானுஜரை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றியதாக ஐதீகம்.இந்த சன்னதியில் பெருமாள் சீடனின் ரூபத்தில் காட்சியளிப்பதால் வைஷ்ணவ நம்பி என்றும் அழைக்கப்படுகிறார்.

பக்தி பயணமாக மட்டுமல்லாமல் மனம் மகிழும் பயணமாகவும் அமையும் இந்த ஊருக்கு வாய்ப்பிருந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்.

Read more...

சமீபத்தில் ரசித்தது...

>> Sunday, January 4, 2009எப்போதடா வருவாய்?

என் மணாளா!


திறந்தும் என் விழிகள்

எதையுமே காணவில்லை -உன்

நினைவுகளில் உறங்கியதால்!


மறந்தும் என் இதழ்கள்

மொழியொன்றும் பேசவில்லை -உன்

நினைவுகளில் இறங்கியதால்!


நினைவுகள் கலைந்திடுமோஎன்று

உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்

நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!


நீ அழைத்தால்

எந்தத் திசைக்கும் வந்திடும்

ஆவலில் என் பாதங்கள்!


எப்போதடா வருவாய்?

என் மணாளா!


படைப்பு

ஷூ-நிசி

Read more...

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP