கடவுள் ஏன் கல்லானான் ?

>> Friday, December 5, 2008

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலே சொற்பொழிவாற்றப் போயிருந்தார். அங்கே ஒரு அமெரிக்கப் பெண்மணி அவரிடம் வந்தாள்.

அவரைப் பார்த்து, "இந்தியர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பதே எனது கருத்து" என்றாள்.

இவரும் கோபம் கொள்ளாமல் "ஏன்" என்று சாந்தமாகக் கேட்டார்.

அதற்கு அவள் " நீங்கள் முட்டாள்தனமாகக் கல்லை வைத்துகொண்டு, இதுதான் கடவுள் என்கிறீர்களே? அதனால்தான்" என்றாள்.

அவர் சிரித்தபடி, " அம்மணி, ஆதிகாலத்திலே மனிதன் நெருப்பை எப்படி உண்டாக்கினான்?." என்று கேட்டார்.

" இரண்டு கற்களை உரசித்தான் நெருப்பினை உண்டாக்கினார்கள் என்றாள். விவேகானந்தர் சிரித்தபடி, " இதனால் கல்லுக்கு மின்சார சக்தி இருக்கிறதல்லவா?அதைப் போலவே இன்று உலகெங்கும் மின்சாரம்தானே அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, இந்த உலகின் ஆதாரமே கல்தான்.அதைத்தான் நாங்கள் கடவுள் என்று வணங்குகிறோம்" என்று கூற அவள் வாயடைத்துப் போய்விட்டாள்.

2 comments:

வடுவூர் குமார் December 11, 2008 at 10:44 PM  

அருமை.

அன்புடன் அருணா December 13, 2008 at 5:22 AM  

எங்க அப்பாவுக்கு விவேகானந்தரை ரொம்ப பிடிக்கும்.எனக்கும்தான்....அவருடைய சொற்பொழிவுகள் அருமையாக இருக்கும்.இந்தப் பதிவும் கூட

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP